- முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி நிலையாக நகர்கிறது, என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
- சீனா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், நேற்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் உரையாடினார்.
- விரைவான நகர்ப்புற விரிவாக்கங்களால் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்க வழிவகுத்தது, என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
- நமது வான் பாதுகாப்புத்திறன் அதிகரித்திருப்பது, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் உறுதி செய்யப்பட்டது, என விமானப்படை துணை தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.
- ஜாதி, மதம், மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்த கூட்டம் இருக்கிறது. இந்த மூன்றுக்கும் இணையான போதை திரைப்போதை. அதுக்கு எதிராக ஒருவரும் பேசுவதில்லை, என்று மரங்களின் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
- முதல்வர் இன்று ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா என்ற மக்களின் கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிப்பாரா என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
- உக்ரைனில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டார்.
- வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் ஸ்டாலின், மற்ற முதல்வர்களை காட்டிலும் பின் தங்கி உள்ளதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
















