- தவெகவின் சிறப்புப் பொதுக்குழு நவம்பர் 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- அசாமில் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் வங்கதேச தேசியகீதத்தை பாடியது பெரும் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
- சீன பொருளாதாரத்தை விரைவில் இந்தியா விஞ்சும் என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியன் லுாங் கணித்துள்ளார்.
- பிரதமர் மோடி குறித்த ராகுலின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
- சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் மோடி இன்று முதல் 2 நாள் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை மாலை ஏக்தா நகர், கேவாடியா செல்லும் அவர் எலக்ட்ரிக் பஸ் சேவைகளை தொடங்கி வைக்கிறார். மேலும், சுமார் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கியும், அடிக்கல்லும் நாட்ட உள்ளார்.
- இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இந்தாண்டு இறுதிக்குள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
- நேற்று (அக்.29ம் தேதி) ரபேல் விமானத்தில் பறந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, அம்பாலா விமானப்படை தளத்தில் ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங்குடன் படம் எடுத்துக் கொண்டார். ஆபரேஷன் சிந்துார் நடந்தபோது, ஷிவாங்கியை பிடித்து விட்டதாக பாகிஸ்தான் ராணுவம் பொய் புளுகியது குறிப்பிடத்தக்கது.
- நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ரூ.888 கோடி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
- லாலு பிரசாத் தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவை பீஹார் முதல்வராக்க விரும்புகிறார். சோனியா தன்னுடைய மகனை (ராகுலை) பிரதமராக்க பார்க்கிறார். ஆனால், இந்த இரு பதவிகளும் காலியாக இல்லை,’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- மத்திய பாஜ அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.















