- கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக்.,28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் காகிதச் சுவடிகளை, ‘டிஜிட்டல்’ ஆவணமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
- தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில், எட்டு மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளன.
- தமிழகத்தில் டெங்கு காய்ச்சலில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெறாததால் தான் இறந்ததாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
- மத்திய குழு ஆய்வு செய்ய வருவதை காரணம் காட்டி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட் டதாக, நாகையில் விவசாயிகள் ஆவேசமடைந்தனர்.
- தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி இன்று முதல் துவங்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
- உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி சூர்யகாந்தை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளார்.
- ‘நாடு முழுதும், ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் நடக்கும் சைபர் கிரைம் மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரிக்கலாம்’ என, உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
- ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது, காலணி வீசிய வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை உலகம் சகித்துக் கொள்ளக்கூடாது, என மலேசியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
















