- பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.
- குடியுரிமைக்கான உறுதியான சான்றாக ஆதார் அட்டையை கருத முடியாது; போலியாக அல்லது மோசடியாக ஆதார் அட்டை வாங்கியதால், ஊடுருவல்காரர் ஒருவரால் ஓட்டளிக்க முடியுமா என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
- இந்தியாவின் எல்லைப் பகுதிகளான உத்தரகாண்டில் உள்ள கலாபானி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து நேபாளம் வெளியிட்ட 100 ரூபாய் நோட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- மும்பையில் 72 வயது முதியவர் ஒருவர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 35 கோடி ரூபாயை இழந்துள்ளார். அதுவும் 4 ஆண்டுக்கு பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
- மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில்(எஸ்ஐஆர்), 26 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
- உழவர்களைக் கண்டுகொள்ளாத திமுக ‘உதய’ விழா கொண்டாடுகிறது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
- வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக வலுப்பெற்றது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
- அடுத்தாண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள, ‘ஜி - 20’ உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 28 November 2025 | Retro tamil
