- காசாவில் இனப்படுகொலை செய்வதாக இஸ்ரேல் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய். அதற்கு ஆதாரமில்லை. காசாவில் உணவுப்பொருட்களை ஹமாஸ் அமைப்பினர் திருடுகின்றனர், என ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
- கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்று ஸ்டாலின் கொண்டாடுகிறார். அதிமுக ஆட்சியில் பள்ளிகளை திறந்தோம், திமுக ஆட்சியில் 207 பள்ளிகளை மூடினார்கள். அவர்கள், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் தவறான தகவல் கொடுத்து புகழ வைத்துள்ளனர், என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதிகளை இஸ்ரேல் தங்கள் நாட்டுடன் இணைக்காது என்று இஸ்லாமிய நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
- தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான், நிதி ஒதுக்குவோம் எனக் கூறி, எங்களை மத்திய அரசு மிரட்டி அடி பணிய வைக்க முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- மருந்து பொருட்களின் இறக்குமதிக்கு 100% வரை வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பின் தாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்’ என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டுகள் மீது மட்டுமே குறியாக உள்ளது. அக்கூட்டணிக்கு பீஹார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.
- ஜிஎஸ்டி சீர்திருத்தம் வாகனத்துறையில் ஒரு பெரிய நேர்மறையான சுனாமியை ஏற்படுத்தி உள்ளது என மாருதி நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
- பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர இது நேரமில்லையா எனக்கேள்வி எழுப்பி உள்ள டில்லி ஐகோர்ட், தனிப்பட்ட மற்றும் வழக்கமான சட்டம் தேசிய சட்டத்தை மீறாத ஒற்றை கட்டமைப்பு உருவாவதை பொது சிவில் சட்டம் உறுதி செய்யும் எனக்கூறியுள்ளது.
- சீக்கியர் தலைப்பாகை குறித்து கருத்து தொடர்பாக தொடரப்பட்ட சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்ந்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
- ‘இந்தியா மீதான டிரம்பின் வரிகள் ரஷ்யாவைப் பாதிக்கின்றன’ என்று நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் தெரிவித்தார்.