- உயிரை பறிக்கும் சாராயத்தை பாதுகாக்கும் தி.மு.க., அரசு, உயிரைக் காக்கும் நெல்லை பாதுகாக்க தவறி விட்டது, என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தினார்.
- தேர்தல் கமிஷனர்கள் நாளை மாலை பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். அப்போது நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகளை போன்றவர்கள். அவர்களின் அலட்சியத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது, என ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் விஎஸ் சஜ்ஜானார் கூறியுள்ளார்.
- சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 1250 குடியிருப்புகளை கட்ட அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன ? இதற்காக பல்லாயிரம் கோடி கை மாறியதாக வரும் செய்திகள் உண்மையா? என்பதை திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும், என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், வரவேற்பு குழுவினருடன் இணைந்து நடனமாடி உற்சாகமடைந்தார்.
- 21ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு. இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு, என ஆசியான் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசினார்.
- அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றவாளிகளுக்கு கேடயமாக மாறும்போது, யாரிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்? என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
- பிரான்சில் உள்ள பாரிஸ் லூவ் அருங்காட்சியகத்தில், மாவீரன் நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் என சந்தேகப்படும் நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- உலகிற்கு அமைதியை வலுவாக ஊக்குவிக்கும் தலைவர்கள் தேவை என்று அமெரிக்க அதிபர் டிரம்பை, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பாராட்டி உள்ளார்.
















