Today Headlines | தலைப்புச் செய்திகள் – 26 July 2025 | Retro tamil

* ஒடிசாவில் 15 வயது சிறுமியை 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். அதில், சிறுமி கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து அவரை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

* முதல்வர் ஸ்டாலின் தினம் நாடகம் போட்டு நடித்துக் கொண்டு உள்ளார்,” என பாமக தலைவர் அன்புமணி பேசினார்.

* கடந்த 2022ம் ஆண்டு துவங்கிய ஹிந்து அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் இடையிலான தொடர்ச்சியான உரையாடலின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட முக்கிய முஸ்லிம் மதகுருமார்கள் மற்றும் அறிஞர்களை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார்.

* கம்போடியாவுடனான சண்டை தீவிரம் அடைந்துள்ளதால், தாய்லாந்தில் 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

* துணை முதல்வர் பதவியில் இருப்பதா இல்லையா என்பது குறித்து நான் தான் முடிவு செய்ய வேண்டும். இ.பி.எஸ்., அல்ல, என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

* பீஹார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ” நெருப்புடன் விளையாட வேண்டாம்,” என தெரிவித்துள்ளார்.

* இஷ்டத்துக்கு மின் கட்டணத்தை எழுதுகின்றனர். என்ன கணக்கு வைத்து கணக்கிடுகின்றனர் என எங்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. என் வீட்டுக்கு 12,000 ரூபாய் வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.

* காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, கண்ணி வெடி வெடித்தில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* திருவள்ளூரில் நடந்து சென்ற 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர்.

* போர்களில் ‘ ரன்னர் அப்’ என்பது கிடையாது. எனவே எந்த ராணுவமாக இருந்தாலும், எப்போதும் உஷாராக தயார் நிலையில் இருக்க வேண்டும், என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.

Exit mobile version