- முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 2026 மே மாதம் வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரையில் வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- இந்தியாவில் திறமைசாலிகளும், புதுமைகளும் அதிகளவில் உருவாகிறது, என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
- கடந்த 1995 ம் ஆண்டு பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
- சத்தீஸ்கரில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுக்கள் 71 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இதில் ரூ.64 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 30 பேர் அடங்குவர்.
- ஜம்மு-காஷ்மீரில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது. பிப்ரவரி 2021 முதல் இந்த இடங்கள் காலியாக உள்ளன.
- பீஹார் தேர்தலில் இண்டி கூட்டணிக்கு தயார். ஆறு தொகுதிகள் ஒதுக்க வேண்டும்’ என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இது முக்கிய திருப்புமனையாக இருக்கும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
- நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும், சுதந்திரமான பேச்சுரிமைக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்திய கர்நாடகா ஐகோர்ட், எக்ஸ் சமூக வலைதளத்தின் மனுவை நிராகரித்தது.