- 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று (செப்டம்பர் 23, 2025) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.
- சினிமா என் ஆன்மாவின் இதயத்துடிப்பு என தாதாசாகேப் பால்கே விருது வென்றது குறித்து நடிகர் மோகன்லால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
- டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்த தாறுமாறான கருத்துக்களே, இரு நாடுகள் இடையிலான உறவு சீர் குலைவுக்கு முக்கிய காரணம் என்று காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.
- பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், டில்லி முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான சத்யேந்தர் ஜெயினின் ரூ. 7.44 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
- மொத்த மக்கள் தொகையான 146 கோடி பேரில் 3 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என்ற விபரம் வெளியாகி உள்ளது. இது குறித்து வாசகர்கள் தங்களது கருத்துக்களை, வாசகர்கள் கருத்துப் பகுதியில் பதிவு செய்யலாம்.
- இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து, அவர்களை நம்பிக்கை அற்றவர்களா மாற்றுவது இந்த அரசின் அடையாளமாக மாறிவிட்டது, என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
- திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்தது ஜெயலலிதா தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு எதிரொலியாக வாகன விற்பனை அதிகரித்துள்ளது. நவராத்திரி முதல் நாளான நேற்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 10 ஆயிரம் கார்கள் டெலிவரி வழங்கியுள்ளது. அதேபோல் முதல் நாளில் 30 ஆயிரம் கார்கள் விற்பனை ஆனதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
- முறைகேடாக சொகுசு வாகனங்களை பூடான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த புகாரில் மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ‛ஆபரேஷன் நும்கூர்’ என்ற பெயரில் நடக்கும் இந்த ரெய்டு கேரளாவில் சுமார் 30 இடங்களில் நடந்தது.
- கூடுதல் வருமானம் 15 கோடி ரூபாயை மறைத்ததற்காக, 1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி, நடிகர் விஜய்க்கு பிறப்பித்த உத்தரவு சட்டப்படி சரியே’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.