- கரூர் பிரசார கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி த.வெ.க., தலைவர் விஜய் பேசியதால், மின்தடை ஏற்படுத்தப்பட்டது,’ என தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலை கடற்படை பெற்றுக் கொண்டது. இந்த கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் 8 கப்பல்களில் முதலாவது இதுவாகும்.
- அமெரிக்கா செல்வந்த நாடாகவும், சக்தி வாய்ந்த நாடாகவும் இருப்பதற்கு காரணம் வரிகள் தான் என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
- இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
- பி.எம்., ஸ்ரீ’ எனப்படும், பிரதமரின் முன்னேறும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவை பார்த்து மனம் மாறினால் என்ன? என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
- ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கட்டாயம் கீழே போட வேண்டும். இனி அவர்களால் காசாவை நிர்வகிக்கவே முடியாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறி உள்ளார்.
- வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை சமூக வலைதள நிறுவனங்களான மெட்டா மற்றும் டிக் டாக் ஆகியன மீறி உள்ளதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
- டில்லியில் உள்ள வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். போலீசார் அந்த சதித்திட்டத்தை முறியடித்தனர்.
- சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீஹாரில், இண்டி கூட்டணியினர் தொகுதிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள். நவ.14ம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று சென்னை ஐகோர்ட்டில் தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

















