- டில்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய, 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில், தன் மீது அமலாக்கத் துறை பதிந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- திமுக, கம்யூனிஸ்ட்களுக்கு கடவுளைப் பற்றி பேச அடிப்படையில் எந்த தகுதியும் இல்லை, என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளின் போது, பொது நிதியை பரிசு பொருட்களுக்காக செலவிடுவதற்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்துள்ளது.
- அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை, என எச்1பி விசா குறித்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
- எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்திய நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
- நக்சலைட்டுகளுக்கு எதிராக நமது பாதுகாப்பு படைக்கு மற்றொரு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- சில ஐகோர்ட் நீதிபதிகள் சரியாக வேலை செய்யவில்லை. அவர்கள் தங்களது பணியை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
- அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் பிப்ரவரியில் காலாவதியான பிறகும், அணு ஆயுத உச்சவரம்புகளை மேலும் ஓராண்டுக்கு ரஷ்யா கடைப்பிடிக்கும்’ என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.1,600 கோடி முதற்கட்ட நிவாரணம் அறிவித்திருப்பது அநீதி என்று காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் விமர்சித்துள்ளார்.
- இந்த பண்டிகை காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை ஏற்போம், என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
















