- தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்ததால், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.83 ஆயிரத்தை தாண்டியது.
- ஜிஎஸ்டி வரி குறைப்பை தொடர்ந்து ஆவின் பால் பொருட்களின் விலைகளை குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- அருணாச்சலப் பிரதேசம் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெற்றதை விட 16 மடங்கு அதிகம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
- கான்பூரில் இருந்து டில்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் எலி நடமாடியதால் விமான பயணம் 3 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
- நடிகர் விஜயின் பேச்சில் அகந்தை அதிகம் உள்ளது. முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே அவரை பாஜ தான் இயக்குகிறது என்பது தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
- கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கிராமத்தின் மீது பாகிஸ்தான் விமானப்படை 8 வெடிகுண்டுகளை வீசியதில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் காயமடைந்தனர்.
- திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையைச் செய்யவா தமிழக பள்ளிக் கல்வித் துறை? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- ஒன்றை புரிந்து, ஆராய்ந்து கற்க வேண்டுமெனில், தாய் மொழி கல்வியே அவசியம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
- கோவையில் நடக்கும் கனிமவள கொள்ளைக்கு, காரணமானவர்களை கைது செய்து இயற்கையை சுரண்டும் அவலத்துக்கு, முடிவுரை எழுத வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- உஜ்வாலா திட்டத்தின் கீழ், 25 லட்சம் புதிய இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்து உள்ளார். அவர், ‘இது பெண்களுக்கான பரிசு. பெண்களை துர்க்கை போன்று பிரதமர் மதிப்பதற்கு சான்று’, என்றார்.