- நாடு முழுதும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தம் இன்று ( செப்., 22) அமலாக உள்ளது. அதில் பல பொருட்கள் மீதான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
- இந்திய கடற்படை தனது போர்த்திறனை வலுப்படுத்துவதற்காக 4 புதிய போர்க்கப்பல்களை கட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பில் டெண்டர் விடுவது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
- பாஜவின் மலிவான சர்வாதிகார அரசியலுக்கு துணை போகும் நபர்களை புறக்கணிக்க வேண்டும், என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
- ஜிஎஸ்டி வரி குறைப்பு 140 கோடி மக்களின் வாழ்க்கைக்கு நிவாரணத்தை வழங்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
- சீனாவில் மூளைச்சாவு அடைந்த நபருக்கு பன்றியின் நுரையீரலை வெற்றிகரமாக பொருத்தி அதன் இயக்கத்தை அந்நாட்டு மருத்துவர் குழு ஆய்வு செய்துள்ளது.
- ஜிஎஸ்டி சீரமைப்பை வலியுறுத்தியது நாங்கள். இதற்கான பெருமையை பிரதமர் எடுத்துக் கொள்வது ஏன்? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
- ஜிஎஸ்டி வரிக்குறைப்பு சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்றுள்ள வர்த்தகப் புரட்சி என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
- திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே மட்டுமே போட்டி என்று கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ‘விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல’ என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
- தவெக தலைவர் விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. அது தனக்கும் பொருந்தும் என ராஜ்யசபா எம்பி கமல் கூறியுள்ளார்.
- மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது என தமிழக அரசுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி உள்ளார்.