- இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் அமெரிக்கா வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம், என நம் நாட்டுக்கான சீன தூதர் கூறியுள்ளார்.
- முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா, என மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு ராஜ்யசபா எம்பி கமல் பதிலளித்தார்.
- சிலர் அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள், பாவம் அறியாமையில் பேசுகிறார்கள். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள், என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி, மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய் பேசினார்.
- ரஷ்யா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- இஸ்ரோ தனது முதல் ககன்யான் சோதனைப் பணியை டிசம்பரில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.
- பார்லி மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. லோக்சபாவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். இந்த அமர்வில் 14 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 37 மணி நேரம் விவாதம் நடந்துள்ளது.
- சீனாவை எதிர்க்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்” என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
- பணம் வைத்து விளையாடும், ‘ஆன்லைன்’ விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலான, ‘ஆன்லைன் கேமிங்’ ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இது சட்டமானால், விதிகளை மீறுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை அல்லது 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
- இது ஒட்டுமொத்த தேசத்தின் திட்டம், களத்தில் நீங்கள் கற்றுக் கொள்வதிலிருந்து இந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம் என்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்த அனுபவம் குறித்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்தார்.