- பயங்கரவாத தாக்குதலில் ஒரு சிலரின் தொடர்பு காரணமாக காஷ்மீரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவதாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- கடந்த மாதம் ஆப்கன் வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து சென்ற நிலையில், தற்போது அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அஜிஜி, நேற்று டில்லி வந்துள்ளார். இப்பயணத்தில் மத்திய அரசு அதிகாரிகளை அவர் சந்தித்து பேச உள்ளார்.
- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஐகோர்ட் கிளை நீதிபதி சுவாமிநாதன் அங்கு சென்று ஆய்வு செய்தார்.
- டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளது என அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
- பெங்களூருவில், பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தில் இருந்த ரூ.7 கோடியை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். வரித்துறை அதிகாரிகள் என்ற போர்வையில் இவர்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.
- ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட தீவிர நடவடிக்கையில் நக்சலைட்டுகள் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சித் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று (நவ.20) அவர் பீஹாரின் முதல்வராக பதவியேற்கிறார்.
- விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி முறைக்கு மாற வேண்டும் எனவும், இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும், எனவும் பிரதமர் மோடி கூறினார்.
- ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து கொண்டு வர இண்டர்போல் உதவியை வங்கதேசம் நாடி உள்ளது.
- பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரை ஏமாற்றி ரூ.415 கோடியை அல்பலாஹ் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் வசூலித்து இருப்பதை அமலாக்கத்துறை தமது விசாரணையில் கண்டுபிடித்துள்ளது.


















