- மத்திய அரசை பின்பற்றி, மாநில உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை வெளியிட, தமிழக உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில், தர வரிசை பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
- ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ‘டிட்டோ – ஜாக்,’ தன் 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற, நான்கு நாட்கள் கெடு விதித்துள்ளது.
- விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும் என உக்ரைன் அதிபர் ஜெலஸ்கியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதையடுத்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் டிரம்ப்பை சந்தித்து பேசினர்.
- தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, பார்லிமெடில், ‘இம்பீச்மென்ட்’ எனப்படும், பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆலோசனையை துவங்கியுள்ளன.
- அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன்கள், மகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு பணி நடக்கிறது’ என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், அரசியல் கொள்கை சார்ந்த கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுவதால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- மதரசா வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத மதரசா பள்ளிகள், அடுத்தாண்டு ஜூலை 1க்குள் மாநில கல்வி வாரியத்தில் இணைய வேண்டும். இல்லையெனில், அவை மூடப்படும்’ என, உத்தராகண்ட் அரசு தெரிவித்துள்ளது.
- தேசிய நெடுஞ்சாலையில் 65 கி.மீ., துாரத்தை கடக்க, ஒரு வாகன ஓட்டி 12 மணி நேரம் வரை காத்திருக்க நேரும்போது, எதற்காக 150 ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்? என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- நாமக்கலில் நடந்த சிறுநீரக முறைகேட்டை தொடர்ந்து, கல்லீரல் திருட்டும் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஐ.ஏ.எஸ்., வினித் தலைமையில் மீண்டும் விசாரணையை துவங்க மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
- ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக அடுத்த மாதம் கோல்கட்டாவில் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் உட்பட முப்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.