- மத்திய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் காரணமாக மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
- பிரான்சிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக உக்ரைன் தூதரகம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அலுவலகம் உறுதிப்படுத்தின.
- டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை நரகத்தில் இருந்தாலும் அரசு வேட்டையாடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
- மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஷேக் ஹசீனா, இந்தியாவில் எங்கே இருக்கிறார் என்ற புதிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
- வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளிடையே நேரடி விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.
- ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை வெடித்து சிதறியதால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
- டில்லியில் கார் வெடிகுண்டு மூலம் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவனை என்ஐஏ கைது செய்துள்ளது. இவன் டிரோன்களை ராக்கெட் போல தயாரித்து தாக்குதல் நடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்க்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் ஏற்கனவே 4 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
- முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுப்பது தவறு. எங்களிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணியை, அசாம் மாநிலத்திலும் துவக்க தேர்தல் கமிஷன் இன்று அதிகாரபூர்வமாக உத்தரவிட்டு உள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 November 2025 | Retro tamil
