- திருவனந்தபுரம்:சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை என, தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் ‘குட்டு’ வைத்திருக்கிறது. மேலும், கோவில் நிதியை, அரசுக்கு வரும் நிதியாக கருதக் கூடாது என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது.
- சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் செந்தில் குமார், அருள்முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின், கொலீஜியம்’ பரிந்துரைத்துள்ளது.
- ‘ஷரங்’ பீரங்கிகளின் தரம் கேள்விக்குறியாகி இருப்பதால், அவற்றை கொள்முதல் செய்வதை நம் ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது.
- டில்லி, மும்பையில் இருந்து ஐரோப்பிய நாடான கிரீஸுக்கு நேரடி விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க உள்ளது.
- பீஹாரில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடையும் மாணவ, மாணவியர் உயர் கல்வியை தொடர, மாநில அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என, முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
- சட்ட விரோத சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடித்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா மற்றும் நடிகர் சோனு சூட் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அமலாக்கத் துறை அதிகாரிகள், ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.
- தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் மகன் துவங்க உள்ள கல் குவாரிக்கு, கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கருத்து கேட்பு கூட்டத்தில் காரசார வாக்குவாதம் நடந்தது.
- கடந்த 25 ஆண்டுகளாக, பா.ம.க., தலைவராக இருந்த ஜி.கே.மணி கபட நாடகம் ஆடுகிறார், என, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்தார்.
- தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என, எச்சரிக்கை விடுத்துள்ளது.