- ஆட்சியாளரை குறை சொல்லி என்ன பயன்? ஆட்சியாளனை அந்த அதிகாரத்தில் அமர வைத்த மக்கள்தான் பொறுப்பு. என் மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம், என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
- சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
- அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது பொய் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- மதுரையில் நடைபெறும் தவெக மாநில மாநாட்டு பணிகளுக்காக மேலும் 5 குழுக்களை அமைத்து, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார். திருநெல்வேலியில் நடைபெறும் பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
- ஹீத்ரோவிலிருந்து நியூயார்க் சென்ற பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தின் பைலட், பயணம் முழுவதும் காக்பிட் கதவை திறந்து வைத்திருந்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
- ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் அதனை சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 257 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து தற்போது பரிசீலனை செய்யப்போவதில்லை எனவும், 2- 3 வாரங்களுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
- தேர்தல் கமிஷன் சார்பில் நாளை பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது காங்கிரஸ் எம்பி ராகுலின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும்.
- அலாஸ்காவில் அதிபர்கள் டிரம்ப் – புடின் நடத்திய பேச்சுவார்த்தையை வரவேற்கிறோம், என இந்தியா தெரிவித்துள்ளது.













