- தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின், ‘மக்கள் சந்திப்பு பிரசாரம்’ திருச்சியில் நேற்று தொடங்கியது. முன்னதாக திருச்சி விமான நிலையம் வந்த விஜய்க்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து 5 மணி நேரத்திற்கு பிறகு பிரசார கூட்டம் நடக்கும் இடத்திற்கு விஜய் வந்தார்.
- ஏழ்மை, வறுமை, ஊழல் மற்றும் குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று அரியலூரில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
- விஜயின் வரவால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.
- அறிவிக்கப்பட்ட திட்டங்களையும், அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் கூட திமுக அரசு செயல்படுத்தாமல் குறட்டை விட்டு உறங்குவதாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு (விஜய்) இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
- அயல்நாடுகளில் வாழ்பவர்களை தமிழகமும், தமிழக அரசும், தமிழக மக்களும் என்றைக்கு மறக்க மாட்டார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
- பழைய எதிரிகள் – புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை நியமிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- வடகிழக்கு முன்னேற்றம் இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.
- நீண்டதூர கடல் கண்காணிப்பு விமானங்களான பி-8ஐ ரோந்து விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதனால், இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவுடன் மீண்டும் சுமூகமான உறவை ஏற்படுத்தி, வர்த்தகத்தில் ஈடுபட அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.