- திருப்பதி ரயிலில் பலாத்கார முயற்சியின் போது கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளி ஹேமராஜூக்கு சாகும் வரை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
- மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை தொடங்கியது.
- படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி., கல்யாணசுந்தரத்திடம் இருந்து தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை பறிக்க, அவரது மகனின் தவறான செயல்பாடுகளே காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் என திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
- எனது பொது வாழ்க்கையை முடித்து வைக்கவே வைகோ எனக்கு துரோகி பட்டம் கொடுத்துள்ளார். இந்த வார்த்தையை ஜீரணிக்கவே முடியவில்லை என்று ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
- விண்வெளி மையத்திலிருந்து மாலை 4.35 மணிக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் புறப்பட்டனர். நாளை மதியம் 3 மணிக்கு பூமிக்கு வந்தடைவார்கள்.
- நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, போலீசார் தடுத்ததால் சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுசெயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
- தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரன்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன. என டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.