- நாங்கள் கொள்கையை தான் ஆதரிக்கிறோம். அரசியல் கட்சியை ஆதரிக்கவில்லை, என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
- மாணவர்களை மேம்படுத்துவதில் தேசிய கல்விக் கொள்கை முக்கிய பங்கு வகித்துள்ளது என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
- காசாவில் 2014ம் ஆண்டு கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
- திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், பயணியிடம் அவதுாறாகவும், மத ரீதியாகவும் பேசியதை கண்டித்து வள்ளியூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- பெல்ஜியத்தில் சந்தேகத்திற்கிடமான டிரோன்கள் ஊடுருவிய நிலையில், ஆயுதங்களையும், ராணுவ வீரர்களையும் உதவிக்கு அனுப்ப பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.
- ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன், என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
- பாட்னாவில் இருந்து இத்தாலி வரை ராகுல் எத்தனை யாத்திரை நடத்தினாலும் காங்கிரஸ் எம்பி ராகுலால் ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முடியாது. அவருக்கு பீஹார் இளைஞர்களை பற்றி கவலையில்லை, என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
- ஆசிய கண்டத்தில் ஒரு மிகப்பெரிய சக்தியாக மட்டுமல்லாமல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு மாபெரும் கடல் சக்தியாக திகழ்வதாக முப்படைகளின் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடந்த 9வது ராணுவ இலக்கிய விழாவில் முப்படைகளின் தளபதி அனில் சவுகான் பேசினார். அதில், அவர் கூறியதாவது; 20ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால், இந்தியாவின் பிரிவினை, பாகிஸ்தான் உருவாக்கம், சீனாவுடனான போர் ஆகியவை இந்தியாவை ஒரு கண்டம் அளவிலான கண்ணோட்டத்தை கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மர்ஜா என்ப்வர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். அங்கிருந்து பேட்டி கொடுத்த அவர், ‘ஜாமின் கிடைத்ததும் நாடு திரும்புவேன்’ எனக்கூறியுள்ளார்.
- கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த அவர் (விஜய்) ரொம்ப மனிதாபிமானமிக்கவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 | Retro tamil
