- இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகளில் குறிப்பிட்ட தவறு உள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சரி செய்யவும் முடியாது, என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.
- ஊழல் மற்றும் ஜாதி மோதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாத திமுக அரசு, பாஜவுக்கு எதிராக மொழி மற்றும் திராவிட கொள்கை குறித்த விவகாரங்களை எழுப்புவதாக குற்றம்சாட்டியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மனநிலை ஆக்கிரமித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
- ஆசிய கோப்பை தொடரின் பைனலில் தென் கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பில்லை. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பில்லை , என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
- ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்தது.
- நாட்டின் இரண்டாவது உயரிய பதவியான துணை ஜனாதிபதி பதவிக்கு, சம்பளம் எதுவும் கிடையாது; ஆனால் சலுகைகள் ஏராளமாக இருக்கின்றன.
- புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யா வெளியிட்ட ஒரு அறிவிப்பு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி உள்ளது. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து பயன்படுத்த தயார் உள்ளதாக கூறியுள்ளது அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
- ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அறிமுகமான போட்டியில் தென் ஆப்ரிக்கா வீரர் பிரெனெலன் பந்துவீச்சில் குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரது பந்துவீச்சை ஆய்வு செய்த பின், அவரை தொடர்ந்து விளையாட ஐசிசி அனுமதி வழங்கியது.
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் கண்ணாடி மேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், தனக்கும் உயரத்துக்கும் சிக்கலான உறவு உள்ளது எனக்கூறியுள்ளார்.
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட்ட திண்டுக்கல் தொழிலாளி நாராயணசாமி, அதற்கு உதவிய அப்போதைய முதல்வர் இபிஎஸ்க்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு, அதிமுக ஆட்சி அமைந்ததும் வேலை தருவதாக இபிஎஸ் உறுதி அளித்தார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 08 SEP 2025 | Retro tamil
