- தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இதில், வருவாய் இல்லாத சங்கங்களின் செலவுகளுக்கான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனால், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களிடம் பயன்படுத்தாமல் உள்ள நிலங்களை, ஏலம் வாயிலாக விற்கும் பணிகள் துவங்கின.
- வளி மண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், கோவை, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமான, ‘காபா’வின் ஆலோசனைக் கூட்டம், இந்த மாதம் டில்லியில் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு நடத்த அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- விஜயகாந்த் படத்தையோ, திரைப்பட வசனங்களையோ எந்த அரசியல் கட்சிகளும் பயன் படுத்தக் கூடாது, என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.
- தமிழகத்தில் இந்தாண்டில் மட்டும் 3 எஸ்.ஐ.,க்கள், 2 போலீசார் குடும்ப பிரச்னை, நண்பர்களுடன் தகராறு, குடிபோதையில் தகராறு போன்ற காரணங்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் உச்சபட்சமாக நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஸ்டேஷனிற்கு உட்பட்ட பகுதியில் தகராறு குறித்து விசாரிக்க சென்ற சிறப்பு எஸ்.ஐ., சண்முகசுந்தரம், கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பாகிஸ்தான் 2035ம் ஆண்டுக்குள் சீனாவின் ஆதரவுடன் நிலவில் விண்கலத்தை இறக்க திட்டமிட்டுள்ளது.
- சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், ‘கிராண்ட் மாஸ்டர்ஸ்’ செஸ் தொடர் நடத்தப்படுகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில்மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர்.
- சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 75 சதவீத வருகைப்பதிவு இருந்தால் மட்டும்தான், பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
- அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், விசா வழங்குவதிலும் கெடுபிடி காட்டுகிறார். விசா காலம் முடிந்தும் தங்குவதை தடுக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.