- பாமக நிறுவனர் ராமதாசை சுற்றி துரோகிகள், தீயசக்திகள் உள்ளனர். அவர்கள் இருக்கும் வரை அவருடன் சேர மாட்டேன், என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
- கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ” எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாத ஒரு கொடூரம்” எனக்கூறியுள்ளார்.
- திமுகவில் துணைச் செயலாளர் பதவி, 7 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனும், எம்பியுமான கதிர் ஆனந்துக்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால்( உயர்ஜாதியினரால்) நம் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது, என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- பீஹாரில் எத்தனை ரோஹிங்கியாக்கள் அடையாளம் காணப்பட்டனர்? தேர்தல் கமிஷன் அவர்களின் பெயர்களை நீக்கிவிட்டதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
- பொருளாதாரம் காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது, என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
- பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- வளர்ச்சியடைந்த பீஹாராக தேசிய ஜனநாயக கூட்டணியால் மாற்ற முடியும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
- காங்கிரஸ் தலைமையின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் அக்கட்சி எம்பி சசிதரூர், வாரிசு அரசியலை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் கோபம் அடைந்த நிலையில், சசி தரூர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பாஜ அறிவுறுத்தி உள்ளது.
- பெங்களூருவில் கையடக்க சாதனங்களை பயன்படுத்தி முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்க எம்-யுடிஎஸ் சஹாயக் திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கி உள்ளது.
















