- ஜிஎஸ்டியில் 4 வரி அடுக்குகளை 2 ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும் 18 சதவீத வரி அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஏற்கனவே இருந்த 12 மற்றும் 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கப்பட்டு உள்ளன.
- இந்திய மீது அமெரிக்க வரி விதித்துள்ள சூழ்நிலையில், சர்வதேச அரசியல் அல்லது பாதுகாப்பு மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது எனக்கூறியுள்ள அவர், இதனால் அந்நாடுகள் சிக்கல்களை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.
- விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேற்றுவோம் என்று பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஹிமாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்க்கும் மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 341ஐ தாண்டி உள்ளது. மேலும் இதனால் ரூ.3,52,541 கோடி மதிப்பு சொத்துகள் சேதம் அடைந்துள்ளன.
- தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுக – பாஜ தலைமையில் மாபெரும் கூட்டணியை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படியிருக்கையில், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்பு குழு என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
- எல்லா துறைகளிலும் ஊழல் என்பதற்கு மதுரை மாநகராட்சியே ஒரு உதாரணம். மக்கள் செலுத்தும் வரியெல்லாம் தனி நபருக்குச் செல்கிறது, திமுகவினருக்குச் செல்கிறது, என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- டிரம்பின் ஈகோ காரணமாக இந்தியா உடனான உறவை அழிக்க அனுமதிக்க முடியாது’ என அமெரிக்க எம்பி ரோ கன்னா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
- மஹாராஷ்டிராவின் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
- அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் இறந்துவிடும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
- முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
 
			















