- தர்மஸ்தலா வழக்கில், ஈ.டி., எனும் அமலாக்கத்துறையும் களத்தில் குதித்துள்ளது. தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பியோருக்கு, வெளிநாடுகளில் இருந்து பணம் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, விசாரணையை துவக்கி உள்ளது.
- அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் கையெழுத்தாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளான நிலையில், பிரதமர் மோடி முதன்முறையாக, வரும் 13ல் அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மக்கள் கொடுத்த மனுக்கள் வைகை ஆற்றில் வீசிச் சென்றுள்ளனர். இவர்களா மக்கள் பிரச்னையைத் தீர்ப்பார்கள்? மக்கள் பிரச்னையை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கு பிரச்னை உருவாக்காமல் இருந்தால் போதும் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- 127 கிலோ தங்க கடத்தல் வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யாவுக்கு வருவாய் புலனாய்வுத்துறை ரூ.102 கோடி அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
- இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
- சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், குண்டு துளைக்காத ரயில் மூலம் அந்நாட்டுக்கு சென்றடைந்தார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் நாங்கள் முழு உறுப்பினர் ஆவதை இந்தியா தடுக்கிறது என அஜர்பைஜான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு உள்ளதால் சர்வதேச அமைப்புகளில் எங்களை பழிவாங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
- குடிபெயர்ந்து வரும் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்களை, வங்கிச் சேவை வட்டத்துக்குள் கொண்டு வர சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், என்று, சென்னையில் நடந்த சிட்டி யூனியன் வங்கி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
- செப்டம்பர் 5ம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
 
			















