- கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை தான் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், முதல்வருக்கு ஏன் இத்தனை பதற்றம், என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பாஜ உண்மை கண்டறியும் குழுவில் இடம் பெற்று இருந்த அனுராக் தாக்கூர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
- பொம்மைகள் முதல் ராணுவ டாங்கிகள் வரை, இந்தியா அனைத்தையும் உருவாக்குகிறது. இந்தியா உலகின் தொழிற்சாலையாக உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் வாக்குகள் சென்றுவிடும் என்று பாஜ பி டீம், கைக்கூலி என்று என்னைப் பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புக்கின்றனர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
- ஆப்பரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் எப் 16, ஜேஎப் 17 ரக விமானங்கள் உள்பட 10 விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், நாமக்கல், அரியலுார், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (அக் 03) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 41 பேரை பலி கொண்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
- கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று ஆட்கள் சேர்க்கும் அசைன்மென்ட் இபிஎஸ்க்கு பாஜ கொடுத்து உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகை த்ரிஷா வீடுகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
- கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.