- முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலன் குறித்து விசாரித்தார்.
- சென்னையில் இருந்து, குவைத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதனால், அதில் இருந்த 191 பேர் உயிர் தப்பினர்.
- தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
- சட்டம் ஒழுங்கில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை. அது எங்கு இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நாடாக மாறி கொண்டு உள்ளது,” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
- நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ஒத்தி மட்டுமே வைக்கப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- அரசின் திட்டங்களுக்கு உயிருடன் இருக்கும் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்துவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- ஆக.17ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- கடந்த 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் வெளியான ‘பார்க்கிங்’ படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறந்த படம், சிறந்த திரைக்கதைக்காக இந்த படம் தேர்வாகியது. மேலும், இதில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகர் விருதை பெறுகிறார்.
- கடந்த ஜூலை மாதத்துக்கான நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டு(2024) ஜூலை மாதம் வசூலான 1.73 லட்சம் கோடியை விட 7.5 சதவீதம் அதிகம் ஆகும்.
- கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் திமுக அரசு இருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 02 August 2025 | Retro tamil
