- கரூர் ”இனி இது போன்ற ஒரு சம்பவம் நாட்டில் நடக்கவே கூடாது” என்று நெரிசலில் சிக்கி, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- ”கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப கூடாது. அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, விஜய் தரப்பினர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 3ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது.
- கரூரில் வேண்டுமென்றே விஜய் வருகை காலதாமதம் செய்யப்பட்டதாக போலீஸ் எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிதாக தவெக தலைவர் விஜய் மீது திமுக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளது.
- கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக தலைவர் விஜயிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
- கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். அவர் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உறவினர்களிடம் விசாரித்து தகவல்கள் சேகரித்து வருகிறார்.
- சென்னையில் இன்று (செப்டம்பர் 29) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. மீண்டும் மாலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,770 ஆகவும், ஒரு சவரன் ரூ.86,160 ஆகவும் விற்பனை ஆகிறது.
- மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். ம்பை, தானே, நாசிக் உள்ளிட்ட இடங்களுக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
- இந்தியா-பூடான் நாடுகளுக்கு இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் இணைந்து அறிவித்தார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 29 SEP 2025 | Retro tamil
