- ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத, மனிதநேய மக்கள் கட்சி உட்பட ஆறு பதிவு செய்த கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- திருவாரூர் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமனின் ரவுடித்தனத்தை வீடியோவாக வெளியிட்டு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
- மதுரை சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, தமிழகம் முழுவதும் வரி விதிப்பு முறையாக செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
- நம் நோக்கம் சக்தியைக் காட்டுவது அல்ல. இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்புக் கொள்கையை நம்பியதில்லை, என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
- பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
- ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
- தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
- வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- இடைவெளிக்கு பிறகு மீண்டும் நவீன் பட்நாயக்குடன் வி.கே.பாண்டியன் இணைந்திருப்பது, ஒடிசா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.















