- ” பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பான நடவடிக்கை இருக்கக்கூடாது. அதனை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது,” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
- பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்து மோடி வெற்றி பெற்று விட்டார். தமிழகத்திலும் அதுபோன்று ரூ.15 ஆயிரம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அம்மாக்களிடம் எல்லாம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள் என்று சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- நாட்டையே உலுக்கிய டில்லி கார்குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இப்போது மும்பை வரை நீண்டுள்ளது. சந்தேக நபர்கள் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர புலன் விசாரணையில் இறங்கி உள்ளனர்..
- தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது
- டில்லியில் உள்ள நீதிமன்றங்களுக்கும் இரண்டு சிஆர்பிஎப் பள்ளிகளுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எங்களின் நேர்மையான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன, பலனில்லை. இருப்பினும் பீஹார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.
- டில்லி செங்கோட்டையில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலை சதிகாரன் டாக்டர் உமர் நபி நியாயப்படுத்தி பேசிய பழைய வீடியோ வெளியாகி உள்ளது.
- சாலை களில் ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட மேல் நடவடிக்கைக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை விதித்து இருந்த இடைக்கால தடை டிசம்பர் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
- வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ள தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நாடு கடத்தப்பட்ட வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடுமையாக சாடியுள்ளார்.

















