- டிஜிட்டல் கைது என மோசடி செய்து ஏமாற்றும் நிகழ்வுகள் குறித்த புகாரை தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் உதவும்படி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் தெரிவித்துள்ளது.
- காசாவில் மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
- திமுக அரசில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கிண்டல் செய்துள்ளார்.
- தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சாலை களில் ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால உத்தரவிட்டது.
- ஜாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
- சட்டசபையில் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் 5 முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
- சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நாட்டில் தலித்துகளுக்கு எதிராக எங்கு அட்டூழியங்கள் நடந்தாலும், அவர்களுக்கு நீதி கிடைக்க போராடுவோம் என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் இன்று (அக் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200க்கு விற்பனை ஆகிறது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil
