- தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற காரணத்தினால், விஜய்க்கு வெளியே வர பயம் என அமைச்சர் துரைமுருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
- ராஜ்யசபா எம்பி கமல் சொல்வதற்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள், என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
- கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் என்பவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
- கத்தாரில் யுபிஐ சேவையை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். அவர், கத்தாரில் இந்தியாவின் சொந்த யுபிஐ சேவையை தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறோம் என தெரிவித்தார்.
- கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ’ அழைப்பில் தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது அவர்களிடம், நான் உங்களுடன் இருக்கிறேன் என விஜய் உருக்கமாக பேசி இருக்கிறார்.
- கொழும்பில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் கொழும்பு செல்லும் பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இப்ப நான் பேசுறத கூட வச்சி அரசியல் பண்ணலாம். பண்ணாமல் இருப்பது நம்ம இரண்டு பேர் கடமை,” என, ‘கரூர் சம்பவத்தில் அரசியல் செய்யப்படுகிறதா’ என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கமல் பதில் அளித்தார்.
- 2001ம் ஆண்டு இதே நாளில் நான் முதல் முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றேன். என் சக இந்தியர்களின் தொடர்ச்சியான ஆசீர்வாதங்களுக்கு நன்றி, என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையான போர் தொடங்கி, இன்றுடன் ( அக்., 7) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. போரில் இறந்தவர்களை நினைவு கூரும் வகையில், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மறுபுறம், எகிப்தில் இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையே பேச்சுவார்த்தை 2வது நாளாக நீடிக்கின்றன
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 07 Octo 2025 | Retro tamil
