- ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
- தமிழக அரசு, சீனியாரிட்டி பட்டியல் தயாரிப்பதை தாமதம் செய்து வேண்டுமென்றே பொறுப்பு டிஜிபி நியமனம் செய்துள்ளதாகவும், சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு இவ்வாறு செய்துள்ளதாகவும், போலீசார், அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
- உயிர்ப்பலி ஏற்படும்போதும், ஏதேதோ கதைகள் சொல்லி மடைமாற்றுவதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, தவற்றை ஒப்புக்கொண்டு, தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு, என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- டெண்டர் வழங்கியதில் ரூ.98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
- குடிபெயர்ந்து வரும் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்களை, வங்கிச் சேவை வட்டத்துக்குள் கொண்டு வர சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், என்று, சென்னையில் நடந்த சிட்டி யூனியன் வங்கி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
- சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியால் இந்திய திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது சமூக வலைத்தளங்களில் அதிக பாலோயர்களை வைத்துள்ள சிலர் திரைப்படத் தயாரிப்பாளர்களை விமர்சனங்கள் என்ற பெயரில் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
- ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் எனது தாயை அவமதித்துவிட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- ரஷ்யா மற்றும் சீனா அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசியது, அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் மத்தியில் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருப்பது அவர்களது கருத்துக்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
- 3 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியா வருகிறார். அவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 02 SEP 2025 | Retro tamil
