- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன் அளித்துள்ளார்.
- அடுத்த 2 வாரங்களுக்கு விஜய் மக்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
- கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
- விஜய் அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
- காசா-இஸ்ரேல் அமைதி பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை வரவேற்ற பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
- தமிழகத்தில் இன்று (அக் 01) 4 மாவட்டங்களிலும், நாளை (அக் 02) 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ஜிஎஸ்டி வரி செப்டம்பர் மாதம் ரூ.1.89 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு (2024) செப்., மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.
- கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக, அமெரிக்க அரசு நிர்வாகத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் முடங்கியது. இதனால் அரசு ஊழியர்கள் 7.50 லட்சம் பேர் கடுமையான பாதிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
- நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் புலம்பி தள்ளி வருகிறார்.
- ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று (அக் 01) தொடங்கியது. டில்லியில் நடந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார்.