- ‘லைக்கா’ நிறுவனத்துக்கு தர வேண்டிய, 21.29 கோடி ரூபாய் கடனை, 30 சதவீத வட்டியுடன் செலுத்தும்படி, நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
- கோவையின் புதிய அடையாளமாக, ரூ.208.50 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை இன்று (நவ.,25) தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்காகவும், தங்கள் பிழைப்புவாத வியாபாரத்திற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது திமுக என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- டிரம்பின் உக்ரைன் அமைதி திட்டம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறி உள்ளார்.
- புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு நவம்பர் 29ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
- அயோத்தியில் இன்று காவிக்கொடி ஏற்றியது வரலாற்று சிறப்பு மிக்க தருணம். இது கொடி அல்ல, இந்தியாவின் கலாசார அடையாளம் என பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
- எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக, 11 வழித்தடங்களில் விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
- சென்னையில் இன்று (நவ.,25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூல் நடப்பது பற்றி பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் கூறுவதாக, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரவித்துள்ளார்.
- பீஹாரை முன்னேற்றும் வகையில் செயல் திட்டங்களைத் தயாரிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
















