- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பெறப்பட்ட, 49,429 கோரிக்கை மனுக்களில், 19,290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ‘விடுபட்டோர் எல்லாருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்த, இரு தினங்களிலேயே, தி.மு.க., அரசின் சாயம் வெளுத்துவிட்டது.
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் உள்ள குழந்தைகள் மாணவர்கள் அனைவரையும் ஊக்குவித்து குடும்பத்துடன் கொண்டாட வேண்டும்.
- சென்னையில் இன்று (நவ.,06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90 ,560க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்வை சந்தித்து உள்ளது.
- துணை முதல்வர் உதயநிதிக்கு சனாதனம் குறித்து சந்தேகம் இருந்தால், தன் தாயிடம் கேட்டு விளக்கம் பெற்று கொள்ளலாம்’ என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
- மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல், வி.ஏ.ஓ., பணியிடங்களை நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
- ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.
- கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், ‘பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்’ என்ற பிரசாரத்தை, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி துவக்கி உள்ளது.
- ஆன்லைன் சூதாட்ட செயலியை அறிமுகப்படுத்தியது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ்ரெய்னா மற்றும் ஷிகார் தவானுக்கு சொந்தமான ரூ.11.54 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
- தென்னாப்பிரிக்காவில் நவம்பர் இறுதியில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
- அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது. அமெரிக்கா இப்போது ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கிறது என நியூயார்க் நகர மேயர் தேர்தலில் தோல்வி குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
















