- உள்நாட்டு பாதுகாப்பில், இந்தியாவிலேயே, தமிழக போலீஸ் முன்னணி வகிக்கிறது, என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படுவாரா என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அப்படி ஒரு ஆலோசனை ஏதும் நடக்கவில்லை. மாநிலத்தில் முதல்வர் பதவி ஏதும் காலியாக இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்திய நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவதாக மக்கள் நம்புகிறார்கள் என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுதான்ஷூ திரிவேதி கூறினார்.
- அ.தி.மு.க., கூட்டணியில் 23 சீட், தி.மு.க., கூட்டணியில் 14 சீட் கேட்டு, இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்து, தே.மு.தி.க., காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆந்திராவில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைத் தடுக்க முயன்ற கோயில் அதிகாரி ரமா தேவி மீது நடத்திய தாக்குதலில் மயக்கமடைந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் இன்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- பா.ம.க.,வில் ராமதாஸ், அன்புமணி இருதரப்பும், தேர்தல் ஆணையத்தை அணுக இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
- வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதற்கு, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- ”எமர்ஜென்சியின் போது சித்திரவதை மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் நடந்தது. இன்றைய இந்தியா 1975ம் ஆண்டு இந்தியா அல்ல” என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் விமர்சித்துள்ளார்.
- ஹைதராபாத் அணிக்கு மிரட்டல் மற்றும் மோசடி உள்ளிட்ட பல்வேறு புகாரின் பேரில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெகன்மோகன் ராவ் உள்பட 5 பேரை தெலங்கானா சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.