த.வெ.க தலைவர் விஜயை மறைமுக தாக்கி பேசிய டி.கே.எஸ் இளங்கோவன்

ஜராத்திலிருந்து தான் போதை பொருள் தமிழகத்திற்கு வருவதாகபும் அதிகம் போதை பொருள் விற்பனையாகும் மாநிலமாக குஜராத் உள்ளதாக திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு – அண்ணா, கலைஞர் காலத்தில் போராடினாலே 15 நாள் சிறை – தற்போது இப்படி இருந்தால் பல பேர் கட்சியே ஆரம்பித்து இருக்கமாட்டார்கள் என த.வெ.க தலைவர் விஜய் மீது மறைமுக தாக்கி பேசினார் டி.கே.எஸ்

விழுப்புரம் மத்திய மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட பொருப்பாளரும் விழுப்புரம் எம்.எல்.ஏ வுமான டாக்டர் லட்சுமணன் ஏற்பாட்டில், ஓரணியில் தமிழ்நாடு தீர்மாண ஏற்பு கூட்டம் புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கலந்துக்கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன்நான் ஓரணியில் நின்றால் வளர்ச்சி பாதிக்கபடாது, அண்ணா கட்சி ஆரம்பித்தபோது முதல்வராவோம் என கட்சி ஆரம்பிக்கவில்லை, இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய இயக்கம் தான் திமுக தமிழ்நாட்டின் பிரச்சினைக்காக போராடி சிறை சென்றவர்கள் நம் தலைவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சிக்கு வந்த கட்சி திமுக என கூறினார். *இந்தியாவில் 76வது ஆண்டில் நடைபோட்டு வரும் கட்சியாக திமுக உள்ளதாகவும் இந்தியாவில் பல கட்சிகள் காணாமல் போய் விட்டன.

தமிழ்நாடு என பெயர் சூட்டியவர் அண்ணா, இரு மொழி கொள்கையை நிலை நிறுத்தியவர் அண்ணா, முன்பெல்லாம் போராட்டம் நடத்தினால் 15 நாள் சிறை. *
தற்போது அப்படியில்லை போராட்டம் நடத்தினால் கைது, சிறை என்றால் இன்று பாதிபேர் கட்சியே தொடங்கியிருக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் நன்றாக பிடித்துவிட்டு, நல்ல வேலைக்கு காத்திருக்கிறார்கள் ஆனால் வடநாட்டில் அப்படியில்லை. உத்திரப்பிரதேசத்தில் ஐந்தாயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளது, ஆனால் நாம் கல்வியை வளர்க்கிறோம்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்கான திட்டங்கள் வருகின்றன. எடப்பாடி.பழனிச்சாமி, கூட்டத்தின் போது திமுகவினர் ஆம்புலன்ஸ் விடுவதாக கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. திமுகவிற்கு எதிரி எடப்பாடி.பழனிச்சாமி இல்லை. ஜெயலலிதா பாஜகவுடன் உறவு இல்லை என கூறினாரோ அந்த பாஜகவுடனும், குடும்பத்தினரை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறினார். பொய் சொல்லி, நாடகம் ஆடும் பழனிச்சாமி, பாஜக காலில் விழுந்துவிட்டார். நம் கல்வி அறிவு சார்ந்த கல்வி முறை இதனை அழித்துவிட்டு மூடதனத்தை பாடமாக கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அதனால் தான் புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள்.

புராண கல்வியை தினித்து, அறிவு இல்லாத சமூகமாக மாற்ற நினைக்கிறார்கள். நம்மை எப்போதும் சூத்திரனாகவே வைத்திருக்க விரும்புவதாக குற்றஞ்சாட்டினார். தமிழ் சமுதாயம் சமத்துவ சமுதாயம். வள்ளூவர் கூற்றுபடி அனைவரும் சமமானவர்கள். நம்மை பிரித்தாண்டு, மனு தர்மப்படி, சூத்திரனாக்க வேண்டும், அடிமையாக்க வேண்டும். நம்மை மீண்டும் அடியாக்கும் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். நம் மாநிலத்தில் அவர்களை அனுமதித்தால் நம்மை நாமே அழித்ததாகும்.

எடப்பாடி.பழனிச்சாமி முதல்வரானதும் தான் நீட் தேர்வு வந்ததாகவும், விற்பனை வரியை ஜி.எஸ்.டி என்ற பெயரில் அபகரித்துக்கொண்டது பாஜக அதனை ஆதரித்தவர் எடப்பாடி.பழனிச்சாமி பாஜகவை அனுமதித்தால் நம் வீழ்ச்சிக்கு காரணமகிவிடும். குஜராத்தில் இருந்து தான் போதை பொருட்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறது. குஜராத்தை போல் அதிக போதை பொருள் விற்பனையாகும் மாநிலம் வேறு இல்லை என தெரிவித்தார். மணிப்பூரில் நான்கு பெண்களை நிர்வானமாக்கி தாக்கினார்கள் அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. தற்போது அமைதி நிலவியதால் பிரதமர் அங்கு செல்கிறார். நம் மாநிலத்திற்கு வரும் முதலீடுகளை, முதலாளிகளை மிரட்டி குஜராத்திற்கு கொண்டு செல்வதாக குற்றஞ்சாட்டினார்.

Exit mobile version