திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் மூன்று கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி .கலைவாணன் திறந்து வைத்தார்.
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூபாய் மூன்று கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் கட்டுமான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்.
குறிப்பாக திருநெய்பேர்- சித்திரையூர் இணைப்பு பாலம் , வடகரை கிராமத்தில் மூன்று வகுப்பறைகள் கூடிய பள்ளி கட்டிடம், பொது வினியோகக் கட்டிடம் , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் பெருங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளிட்டவைகளை திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
