திருக்கடையூரில் மாபெரும் மாடு குதிரை எல்கை பந்தயம் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று உற்சாகம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் மாடு குதிரைகளுக்கான எல்லை பந்தயம் நடைபெறும் இந்த ஆண்டும் இன்று மாபெரும் மாடு குதிரைகளுக்கான எல்லை பந்தயம் காலையிலேயே தொடங்கியது முதற்கட்டமாக மாடுகளுக்கான கொள்கை பந்தயம் நடைபெற்றது இதில் சிறிய மாடு நடமாடு பெரிய மாடு என வகைப்படுத்தப்பட்டு எல்கை பந்தயங்கள் நடைபெற்றது பந்தயத்தில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பந்தயத்தில் பங்கேற்றன திருக்கடையூரில் தொடங்கி அனந்தமங்கலம் வரை எல்கை வரையறுக்கப்பட்டு மாடு பூட்டிய வண்டிகள் சீறி பாய்ந்து சென்றன இரு புறங்களிலும் நின்ற பல்லாயிரக்கணக்கானோர் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு சாலைகளில் மாடுகள் சீறி பாய்ந்தன.
மேலும் மாடுகளுக்கு பந்தயங்கள் முடிந்தவுடன் குதிரைகளுக்கான எல்கை பந்தயங்கள் நடைபெற்றது திருக்கடையூரில் தொடங்கி தரங்கம்பாடி வரை எல்கை வரையறுக்கப்பட்டு குதிரைகளுக்கு பந்தயங்கள் நடைபெற்றது இதில் கரி கரிச்சான் குதிரை நடுக்குதிரை பெரிய குதிரை என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் பந்தயங்களில் பங்கேற்றன பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற பந்தயங்களில் குதிரைகள் பூட்டிய வண்டிகள் சாலைகளில் சீறி பாய்ந்து சென்றனர் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு முந்தி முந்தி சீறி பாய்ந்தது இதனை இருபுறங்களிலும் நின்ற ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர் பின்னர் ஒவ்வொரு பந்தயத்திலும் வெற்றி பெற்ற மாடு குதிரை மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்து கட்சியினர் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.














