திருவள்ளூரில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி  சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

திருவள்ளூரில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி  சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கைது

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி அருகே சாலை மறியல் போராட்டம் நடத்துவது.   அப்போது கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மாநில நிர்வாகிகளை அவைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், முழு நேரப் பணியாளராக அறிவித்த நிலையில், அரசு அறிவிக்கும் அனைத்துப் பணிகளையும் இரவு பகல் என்று பார்க்காமல் தாங்கள் செய்வதாகவும்,  திமுக ஆட்சி வந்ததும் செய்யும் என சொல்லி ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டினர். காவல்துறையினரின் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Exit mobile version