மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவாரூர் மாலவட்டம் மன்னார்குடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையை ஓட்டி திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. மூலவர் சொக்கநாதர் , மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அலங்கரித்து இருந்தனர். சன்னதியில் முன்பு பெரிய திருவிளக்கினை அம்மனாக பாவித்து குங்குமத்தைக் கொண்டு அர்ச்சனை செய்தனர். சிவாச்சாரியாரின் வேத மந்திரம் முழங்க நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் விளக்கினை ஏற்றி வைத்து குங்குமம் மற்றும் புஷ்பங்களை கொண்டு பூஜை செய்தனர்.
