திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா தேரோட்டம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா தேரோட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழும் இக்கோவிலின் இந்திர பெருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது ஒன்பதாம் நாள் திருவிழாவான திரு தேரோட்டம் இன்று நடைபெற்றது தேரோட்டத்தை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் உடன் சுவாமி அம்பாள் 3 தேர்களில் எழுந்தருள மகா தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து . இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்து ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய என்றும் வழிபட்டனர். தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்துது. வழியெங்கும் சுவாமி அம்பாளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்தும் ஆரத்தி எடுத்தும் வழிபாடு நடத்தினர்.

Exit mobile version