ஆன்லைன் மருந்து விற்பனையை மத்திய அரசு நிறுத்த வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளது .
ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும் போலி மருந்துகளின் விற்பனையை தடுத்திட வேண்டும், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் காலச்சார சீரழிவையும் தடுத்து நிறுத்த வேண்டும் என நாடு முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் காலை 6 முதல் மாலை 6:00 மணி வரை கடைகள் அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று நன்னிலம் குடவாசல் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் 1200க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
