நீடாமங்கலத்தில் திருவாரூர் மாவட்டகாங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கை கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.
நீடாமங்கலத்தில் திருவாரூர் மாவட்டகாங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கை கருத்துகேட்பு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் நான்கு தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் தேர்தல்பணிகளை சிறப்பாக செயல்பட்டு அனைத்து வேட்டபாளர்களையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என தீர்மானம் .
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாநிலகாங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்துகேட்பு கூட்டம் .திருவாரூர் மாவட்டகாங்கிரஸ் கமிட்டி தலைவர் நீலன்அசோகன் தலைமையில் நடைபெற்றது , இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் , காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநிலதலைவர் மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்துகொண்டு காங்கிரஸ் கமிட்டி திருவாரூர் மாவட்ட , நகர , வட்டார , இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் திருவாரூர்மாவட்டம் 4 சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களின் தேவைகள் குறித்தும் , விவசாயிகள் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர் , இதில் விவசாயிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யவேண்டும் , பாசனத்திற்கு தேவைப்படும் பகுதிகளில் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டவேண்டும் , தென்னைமரம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கவேண்டும் , விவசாயம் மற்றும் கால்நடைகள் சார்ந்த கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ,மேலும் டெல்டாமாவட்டத்திலிருந்து டெல்லி, பாம்பே , பூனே வழிசெல்லும் புதிய ரயில் வழித்தடம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் வெளிவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர் , அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கேட்ட பின்னர் வரும் 30-ஆம் தேதி காங்கிரஸ் தேர்தல்அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தனர் , மேலும் திருவாரூர் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் நான்கு தொகுதிகளிலும் தேர்தல்பணிகளை சிறப்பாக செயல்பட்டு அனைத்து கூட்டணி கட்சி வேட்டபாளர்களையும் வெற்றிபெறச்செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர் , இக்கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்டதலைவர் நீலன்அசோகன் தலைமையில் மாநிலசெயலாளர் தாஹீர் உள்ளிட்ட மாவட்ட ,நகர, வட்டார நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர் .
