திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி( தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வினோதினி வேட்புமானு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது ஏப்ரல் 23 ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கி இருக்கிறது காலை 11:00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வருகிற ஆறாம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சியின் வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி( தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வினோதினி வேட்புமானு தாக்கல் செய்தார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வினோதினி முத்துப்பேட்டை சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வபாண்டி அவர்களிடம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வினோதினி நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

















