திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும் நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும்.
இந்த திருக்கோவில் செவ்வாய் தலமாக விளங்குகிறது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 கிலோமீட்டாத் வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.
பெருமாள கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான். தாயார் குமுதவல்லி, கோளுர் வள்ளி. தீர்த்தம்: குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்.

நம்மாழ்வார் மட்டும் 12 பாடல்களாலும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வூர் மதுரகவியாழ்வார் பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இத்திருதலத்தின் வரலாறாக பார்வதியின் சாபத்தால் குபேரனிடமிருந்து நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் விலகின. அவை திருமாலிடம் சென்று சரணடைந்தன. இதனால் திருமால் வைத்தமாநிதி என்று அழைக்கப்படுகிறார். பின்பு குபேரன் திருமாலை நவநிதிகளைப் பெற்றுக்கொண்டார்.
















