கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜோசப் கான்வென்ட் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். குமரி மாவட்டத்தில் 99 பள்ளிகள் 8306 மாணவ மாணவிகள் கூடுதலாக பயனடைகின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், 3.05 லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெறவுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நாகர்கோவிலில் உள்ள ஜோசப் கான்வென்ட் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம் 99 பள்ளிகளில் 8306 மாணவ மாணவிகள் காலை உணவு திட்டத்தின் மூலம் கூடுதலாக பயனடைகின்றனர். மொத்தமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் மூலம் 545 பள்ளிகள் 35, 303 மாணவ மாணவிகள் பயனடைகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் துணை மேயர் மேரி பிரின்சி லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


















